Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM

அய்யம்பட்டியில் வட மஞ்சுவிரட்டு : 15 வீரர்கள் காயம்

அய்யம்பட்டியில் நடந்த வடமஞ்சுவிரட்டில் வீரர்களை மிரட்டிய முரட்டுக் காளை.

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம், சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டி வட மஞ்சுவிரட்டில் 15 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர்.

சாலைக்கிராமம் அருகே அய்யம்பட்டியில் மாசிக் களரி திருவிழாவையொட்டி கலுங்கு முனீஸ்வரர் கோயில் முன்பாக வடமாடு மஞ்சு விரட்டு நடந்தது. ராமநாதபுரம், கீழக்கரை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 15 காளைகள் களமிறக்கப்பட்டன.

சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த 150 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர்.

இதில் ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். தலா 25 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. 15 வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சுகாதார ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

வடமஞ்சுவிரட்டை காண சாலைக்கிராமம், வலசைக்காடு, சமுத்திரம், அய்யம்பட்டி, முத்தூர், துகவூர் பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x