Published : 07 Mar 2021 03:16 AM
Last Updated : 07 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக வாங் கப்பட்ட பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் வீணாகி வருகின்றன.
தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவிய காலக்கட்டத்தில் தடுப்பு நடவடிக்கைக்காக அனைத்து ஊராட்சி களுக்கும் பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி திரவம் வழங்க அரசு உத்தரவிட்டது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களிலும் பிளீச்சிங் பவுடர், 3 வகையான கிருமிநாசினி திரவங்கள் கொள்முதல் செய்யப்பட்டு ஊராட்சிகளுக்கு வழங்கப் பட்டன.
காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 43 ஊராட்சிகளுக்கும் பிளீச்சிங் பவுடர்கள், கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது. மீதியை காளையார் கோவில் ஒன்றிய அலுவலகத்தில் வைத்திருந்தனர். பல மாதங்கள் ஆனதால் அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகள் சேதமடைந்து வீணாகி வரு கின்றன. அதேபோல், கிருமிநாசினி திர வங்களும் காலாவதியாகி வருகின்றன.
இதுகுறித்து ஊராட்சித் தலைவர்கள் சிலர் கூறியதாவது:
மீதமிருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை ஊராட்சிகளின் சுகாதார பணிகளுக்காவது வழங்கி இருக்கலாம். மேலும் கரோனா தொற்று இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை. ஆனால் கரோனா பரவல் முடிவடைந்ததை போன்று அதிகாரிகள் அவற்றை வீணாக்கி வருகின்றனர். மேலும் மீதியிருந்த கிருமி நாசினி திரவத்தை வெளியிடங்களில் விற்றுள்ளனர். ஆட்சியர் வீணாகி வரும் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி திரவங்களை ஊராட்சிகளுக்கு விநியோ கிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT