Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
வனத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்ட பறவைகள் களக் கையேடு நூல் வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்த் தங்கால், சக்கரக்கோட்டை, மேல, கீழச் செல்வனூர், காஞ்சிரங்குளம், சித்திரங்குடி ஆகிய பறவைகள் சரணா லயங்கள் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட வில்லை.
இந்நிலையில், ராமநாதபுரம் வன உயிரினக் கோட்டம் சார்பில் மாவட் டத்தில் உள்ள பறவைகள் குறித்த களக் கையேடு நூல் வெளியிடப்பட்டது.
ராமநாதபுரம் வன உயிரினக் காப்பாளர் அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வன உயிரினக் காப்பாளர் சோ.மாரிமுத்து, மாவட்ட வன அலுவலர் அருண்குமார் ஆகியோர் நூலின் பிரதிகளை வெளியிட்டனர். நூல் குறித்து பறவைகள் ஆர்வலர்கள் க.சந்திரசேகர், பைஜூ, ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர். ராமநாதபுரம் வனச்சரக அலு வலர் சு.சதீஷ் வரவேற்றார்.
நூல் தொகுப்பில் இடம் பெற்ற பறவைகள் குறித்து நூலாசிரியர்களில் ஒருவரான செல்வகணேஷ் விளக்கிப் பேசினார்.
தமிழில் அமைந்த நூலில் உள்நாடு, வெளிநாட்டுப் பறவைகள், அவற்றின் உடல் அமைப்பு விவரங்கள், வாழ்விடம், குணநலன் என அனைத்து விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்நூலில் அச்சிடப்பட்டுள்ள கியூஆர் கோடு மூலம் பறவைகளின் ஒலிக்குரலைக் கேட்கவும், அவை பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
நூலில் இடம்பெற்ற விவரங்கள் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. உதவி வனப்பாதுகாவலர் கணேசலிங்கம் நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT