Published : 21 Feb 2021 03:19 AM
Last Updated : 21 Feb 2021 03:19 AM
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலை யில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மானா மதுரை அருகே கள்ளர்வலசை, செய் களத்தூர், ஆலங்குளம் பகுதிகளில் தென்னை நடவு செய்தனர்.
இம்மரங்கள் குறுகிய கால தென்னை என்பதால் 4 ஆண்டுகளில் காய்க்க வேண்டும். ஆனால் 5 ஆண்டுகள் ஆகி யும் வெள்ளை ஈக்கள் தாக்குதலால் போதிய வளர்ச்சியின்றி உள்ளன. இத னால் விவசாயிகள் வேதனை அடைந் தனர்.
இதுகுறித்து வேளாண்மைத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
வயது முதிர்ந்த பெண் ஈக்கள் தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகள் ஒருவித மெழுகுப் பூச்சுடன் காணப்படும். புழுப் பருவம் முடிந்து கூட்டம் கூட்டமாக ஓலையின் அடிப்பகுதியில் இருக்கும். காற்றின் மூலம் மற்ற மரங்களுக்கும் இவை பரவும்.
இளம்பூச்சிகளும், முதிர்ந்த ஈக்களும் சாற்றினை உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவக் கழிவால், ‘கேப்னோடியம்’ என்ற பூஞ்சானம் படரும். இதனால் தென்னையின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதைக் கட்டுப்படுத்த மஞ்சள்நிறம் வளர்ச்சி அடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மை உடையது. மஞ்சள் நிற பாலித்தீன் தாளால் உருவாக்கப்பட்ட ஒட்டும் பொறிகளை 3 அடி நீளம், 1 அடி அகலத்தில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 முதல் 10 அடி உயரத்தில் ஆங்காங்கே தொங்க விட லாம். மஞ்சள் நிற பூ பூக்கும் பயிர்களை யும் பயிரிடலாம்.
பூச்சிகள் வளர்ச்சியைத் தடுக்க தென்னை ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு வேகமாக தண்ணீர் தெளிக்க வேண்டும். கிரைசோபெர்லா என்ற இரை விழுங்கிகள் வெள்ளை ஈக்களை விரும்பி உண்ணும். அவற்றை ஹெக்டேருக்கு ஆயிரம் வரை விடலாம்.
மேலும் வெள்ளை ஈக்கள் பாதிக்கப்பட்ட தென்னைமரத் தோட்டங்களில், அதன் எதிரிகளான காக்ஸ்னேல்லிட் என்ற பொறி வண்டுகள், என்கார்ஸியா என்ற ஒட்டுண்ணிகள் இயற்கையாகவே உருவாகும். இவை காணப்படும் ஓலைகளைச் சிறிது, சிறிதாக வெட்டி, பாதிக்கப்பட்ட தென்னை மர ஓலைகளின் மேல் வைக்கலாம்.
வெள்ளை ஈக்களை அழிக்க பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி னால், இயற்கை எதிரிகளும் அழிந்துவிடும் என்பதால் இயற்கை முறைகளை பின் பற்றியே வெள்ளை ஈக்களைக் கட்டுப் படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT