Published : 14 Feb 2021 03:18 AM
Last Updated : 14 Feb 2021 03:18 AM
நலவாழ்வு, சுகாதாரத்தில் வழிகாட்ட
மக்கள் நல்வாழ்வு கூட்டங்கள் நடத்த திட்டம்
அதிகாரிகளுடன் கடலூர் ஆட்சியர் ஆலோசனை
கடலூர்
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை மக்களுக்கு விளக்கும் வகையில் நலவாழ்வு மன்ற கூட்டம் நடத்த கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது.
இதை நடத்துவது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமையேற்று ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பேசியது:
இந்த மக்கள் நலவாழ்வு மன்ற கூட்ட மானது, சுகாதார பணிகளில் மக்களின் தேவையை அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திட வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கிராமங்களில் உள்ள பிரச்சினைகளை கண்டறிந்து, தற்காலிக தீர்வுக்கு உட்படுத்த வேண்டும்.
அரசின் செயல்பாடுகளை நிரந்தரமாக அவ்விடங்களில் செயல்படுத்திட நல வாழ்வு மன்ற உறுப்பினர் அனைவரையும் முழுமையாக ஈடுபடுத்தி இத்திட்டத்தை செம்மையாக செயல்படுத்திட நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். இத்திட்ட செயல்பாடுகளை வெளி நபர்களை கொண்டு ஆய்வு செய்திட வேண்டும்.
மக்களுடைய மாற்று யோசனைகளை ஏற்று, அதற்குண்டான தீர்வுகளை சுகாதாரதுறையினர் மக்களுக்கு முழுமையாக சென்றடைய வழிவகுக்க வேண்டும்.
மக்களுக்காக அரசு ஏற்படுத்தியுள்ள சுகாதார திட்டங்களை மக்களுக்கு முழுமையாக தெரியப்படுத்திட நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டும். சுகாதார திட்டங்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதிகளுக்கு ஏற்ப மக்களுக்கு உள்ள சுகாதார பிரச்சினைகளை கண்டறிந்து, அதற்குண்டான தீர்வுகளைத் தர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் வரையறுக்கப் படுகின்ற திட்ட நகலானது, மாநில திட்ட குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, கொள்கை முடிவெடுக்க உந்துதலாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், கடலூர் இணை இயக்குநர் (நலப்பணிகள்) ரமேஷ்பாபு, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) செந்தில் குமார், கடலூர் மகளிர் திட்டத்தின் திட்ட அலுவலர் காஞ்சனா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், இந்திய மருத்துவ சங்கத்தினர், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 4 மாவட்டங்களில் கடலூரும் ஒன்று
இக்கூட்டம், தமிழக அளவில் தமிழகத்தில் புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை மற்றும் கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது. கிராம மக்களிடம் கலந்தாலோசித்து அக்கிராமத்தில் காணப்படும் முக்கிய
பிரச்சினைகளைக் கண்டறிந்து சுகாதாரம் மற்றும் சுகாதார திட்டங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது இக்கூட்டத்தின் இலக்கு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT