Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

போடி அரசு ஐடிஐ-யில் ஆடை வடிவமைப்பு பயிற்சி

போடி

போடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்பிரிவுக்கு நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பு முடித்தவர்கள் சேரலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50 பயிற்சிக் கட்டணம் ரூ.200 ஆகும். பயிற்சியில் சேர வயதுவரம்பு கிடையாது. உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். லேப்டாப், இலவச சைக்கிள் உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகளும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக் காலம் 10 மாதங்கள் ஆகும். இச்சான்றிதழ்கள் அரசு, தனியார் மற்றும் சுயதொழில்களுக்கும் தகுதியுடையதாகும்.

ஆர்வம் உள்ளவர்கள் அசல் சான்றிதழ்களுடன் பிப்.15-ம் தேதிக்குள் நேரில் வரலாம். மேலும் விபரங்களுக்கு 9499055768 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என நிலைய முதல்வர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x