Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

மரத்தின் மீது கார் மோதி 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயம் :

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் 7 பேர் காரைக்குடி அரசு பள்ளியில் நடந்த கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர். தேவகோட்டை நீதிமன்றம் அருகே சென்றபோது சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் மோதியது. இதில் ஓட்டுநர் பிரகாசம், 9-ம் வகுப்பு மாணவி புதியா, மாணவர் அஸ்வின், பிளஸ் 2 மாணவர் பிராங்க்லின் ஆகியோர் காயமடைந்தனர். 4 பேரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தேவகோட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x