Published : 16 Oct 2021 06:11 AM
Last Updated : 16 Oct 2021 06:11 AM

கிருஷ்ணகிரியில் நிகழாண்டில் இதுவரை 61 குழந்தைத் திருமணங்கள் தடுத்த நிறுத்தம் :

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை 61 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் திருமணதடுப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத் துவது குறித்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்துப் பேசியதாவது: மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடை பெறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 61 குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் குறித்து ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைத் திருமணம் மற்றும் போக்ஸோ சட்டத் தின் கீழ் 13 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

மேலும், இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடப்பதை தடுக்க பள்ளி ஆசிரியர்கள், வரும் 18-ம் தேதி முதல் ஒருமாத காலம் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைத் திருமணம் செய்ய முயற்சி செய்யும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எந்த கிராமத்தில் அதிகமாக 18 வயதிற்கு உட்பட்டவர்கள் கர்ப்பிணியாக உள்ளனர் என்கிற விவரத்தினை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவியர்கள் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் ஆசிரியர்கள் அவர் களை கண்காணித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜீ, மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x