Published : 16 Oct 2021 06:12 AM
Last Updated : 16 Oct 2021 06:12 AM
சிதம்பரம் நந்தனார் அரசுப் பள்ளி யிலும் மாணவர்களை கடுமையாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி யில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் வகுப்புகளுக்கு சரியாக செல் லாமல் வெளியே சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்தனர். அப்போது அந்த பள்ளியில் பிளஸ் 2 பயிலும்அம்மாபேட்டையை சேர்ந்த சஞ்சய் (17) உள்ளிட்ட 6 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் வெளியே சுற்றித் திரிவது தெரிய வந்தது.
அவர்களை பள்ளியின் இயற்பி யல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அழைத்து கண்டித்து, முட்டி போட வைத் ததாகக் கூறப்படுகிறது.
அப்போது சஞ்சய் என்ற மாணவனை அழைத்த ஆசிரியர், அவரை பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் உதைத்தும் தாக்கியதை சக மாணவரில் ஒருவர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
இந்த கொடூர தாக்குதலைக் கண்டு மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி பொது மக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல்நிலையத்தில் மாணவர் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் 6 பிரிவுக ளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர்.
மாணவர்களை ஆசிரியர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலா னதை தொடர்ந்து ஆசிரியர் சுப்பிரமணியனை பணியடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்த ரவை சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியர் சுப்பிரமணியத்திடம் சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை வட் டாட்சியர் சத்தியன், பள்ளித் தலைமையாசிரியர் குகநாதன் ஆகியோர் நேற்று நேரில் வழங்க ஆட்சியர் உத்தரவிட்டார்.
மாணவனை ஆசிரியர், சரமாரியாக தாக்கியும், காலால் உதைத்தும் தாக்கியதை சக மாணவரில் ஒருவர் செல்போனில் படம் பிடித்து, சமூக வலை தளங்களில் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT