Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

மதுரை காமராசர் பல்கலைக்கழக - தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : அமைச்சர், எம்.பி.க்கு சங்க நிர்வாகிகள் மனு

மதுரை

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் சம்பளம், பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூருக்கு கடிதம் அனுப்பினர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்கள் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே தொடர் உண்ணாவிரதம், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த சு.வெங்கடேசன் எம்.பி அவர்களை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர், தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்வி செயலர் ஆகியோருக்கு தங்களின் கோரிக்கைகள் குறித்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கடிதம் எழுதியிருந்தனர். இதில், அவர்கள் கோரிக்கை நிறைவேற உரிய முயற்சி எடுப்பதாக மாணிக்கம் தாகூர் பதில் கடிதம் அனுப்பியிருப்பதாக சங்க நிர்வா கிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x