Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM
ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக சங்கர் லால் குமாவாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக ஜெ.யு.சந்திர கலா ஜூன் மாதம் 17-ம் தேதி பொறுப்பேற்றார். இவர் தற்போது நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ம.காமாட்சி கணேசன் மாவட்ட ஆட்சியராக (பொறுப்பு) அக்டோபர் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை வணிக வரி இணை ஆணையர் சங்கர் லால் குமாவாட்டை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நேற்று முன்தினம் நியமித்துள்ளது.
ஜெ.யு.சந்திரகலா ஆட்சியர் பொறுப்பில் இருந்து மூன்றரை மாதங்களில் மாற்றப்பட்டு, புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT