Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM

மதுரை கோட்ட ரயில்களில் ரூ.4.16 கோடி அபராதம் வசூல் :

மதுரை

ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வது, ஆள்மாறாட்டம், ரயில் நிலையங்களில் முகக் கவசம் தவிர்த்தல் போன்ற விதிமீறல்களை தடுக்க, பயணச் சீட்டு பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொள்வது வழக்கம். ஏப்ரல் முதல் அக்டோபர் 12 வரை மதுரை கோட்டத்தில் நடத்திய சோதனையில், ரூ.4.16 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை கோட்டத்தில் ரூ.12.78 கோடி, சேலம் கோட்டத்தில் ரூ.4.15 கோடி, திருச்சி கோட்டத்தில் ரூ.2.81 கோடி மற்றும் தெற்கு ரயில்வேயில் அக்டோபர் 12-ம் தேதி மட்டும் ரூ.37 லட்சம் அபரா தமும் வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாத 32,624 பயணி களிடமிருந்து ரூ.1.63 கோடி அபராதமும் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x