Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
இந்தியன் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக மின்னணு செல்வவள மேலாண்மை திட்டங்கள் வழங்கும் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக, ஃபிஸ்டம் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமீன் சித்திக் முன்னிலையில், இந்தியன் வங்கியின் பொதுமோளர் கே.சந்திரா ரெட்டி, ஃபிஸ்டம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆனந்த் டால்மியா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஏற்கனவே உள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு மற்றும் இ-என்பிஎஸ் மட்டுமின்றி புதியமின்னணு திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் அறிவுரை திட்டம், மின்னணு தங்கம், மின்னணு வரித்தாக்கல் சேவைகளும் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இந்தியன் வங்கியின் செயல் இயக்குநர் இம்ரான் அமீன் சித்திக், “இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மொபைல் வங்கி தளம், இந்த்ஒயாசிஸ், இணையதள வங்கித் தளம் ஆகிய மின்னணு சேவைகளை வழங்கி வருகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பொதுமேலாளர் மகேஷ்குமார் பஜாஜ், ஃபிஸ்டம் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராகேஷ் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர் என, இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT