Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

எஸ்டிபிஐ தெருமுனை பிரச்சாரம்

தூத்துக்குடி: மத்திய அரசின் விவசாய விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் டிசம்பர் 26 முதல் ஜனவரி 5 வரை தொடர் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி தொகுதி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ரஹ்மத் துல்லாபுரம், திரேஸ்புரம், முத்தையாபுரம், தெற்கு புதுத்தெரு ஆகிய 4 இடங்களில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடத்தப்பட்டது. தொகுதி தலைவர் ஷேக் முகைதீன், செயலாளர் முஹம்மது தாஹிர் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் அஜிஸ், பொருளாளர் கவுது மைதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர்கள் கிதர் பிஸ்மி, மாரிச்செல்வம், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஜாஹிர் உசேன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்டச் செயலாளர் ஜலால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x