Published : 08 Dec 2021 04:10 AM
Last Updated : 08 Dec 2021 04:10 AM
ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பன்று (டிச.14) பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் விவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வைகுண்ட ஏகாதசி பெருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.14-ம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடர்ந்து முறைப்படியான சம்பிரதாயங்கள் முடிந்து திருமா மணி ஆஸ்தான மண்டபம் என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு நம்பெருமாள் வருகை தந்து தொடர்ந்து பூஜைகள் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்த விழாவுக்கு பக்தர்கள் டிச.14-ம் தேதி கீழ்காணும் நேரப்படி அனுமதிக்கப்படுவர்.
இதன்படி, டிச.14-ம் தேதி மூலவர் தரிசனம் காலை 7 முதல் இரவு 8 மணி வரை, உற்சவர் தரிசனம் காலை 7 முதல் இரவு 10 மணி வரை, சொர்க்கவாசல் வழியாக தரிசனம் காலை 7 முதல் இரவு 10 மணி வரை, கோயிலின் பிரதான வாயிலான ரங்கா ரங்கா கோபுரம் வழியாக காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றி யும் தரிசனம் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT