Published : 17 Nov 2021 03:08 AM
Last Updated : 17 Nov 2021 03:08 AM
திருச்சி: திருச்சியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நவ.23-ம் தேதி கோழிக்குஞ்சுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. தேவையானவர்கள் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிலைய தலைவர் கே.ஷிபி தாமஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் உள்ள கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் உள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவ.23-ம் தேதி கோழிக்குஞ்சுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில், கோழி ரகங்களான கிராமப்பிரியா ரூ.21, வனராஜா ரூ.23, கடக்நாத் ரூ.40 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. தேவைப்படும் விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் 0431- 2331715 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொண்டு நவ.23-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT