Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM
அரியலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி நேற்று வெளியிட்டார். அப்போது, அவர் கூறியது:
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்காக, அரியலூர் நகராட்சியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே வாக்களிக்க தலா 16 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க 2 வாக்குச்சாவடிகள், ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே வாக்களிக்க தலா 17 வாக்குச்சாவடிகள், அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில் தலா 15 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 102 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT