Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த 2 சுமை ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசியை கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, வாகனத்தை ஓட்டிவந்த நின்னியூர் பாண்டியன், மருதூர் சிவபெருமாள், அரிசியை மக்களிடம் குறைந்த விலைக்கு வாங்கிய குழுமூர் மணிகண்டன், மருதூர் செந்தில்நாதன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 2,350 கிலோ அரிசி, 2 சுமை ஆட்டோக்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT