Published : 11 Nov 2021 03:08 AM
Last Updated : 11 Nov 2021 03:08 AM
கரூர்: கரூர் வெங்கமேடு அம்மா திட்ட சாலை பகுதியில் கரூர் நகர போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரில் 2.150 கிலோ கஞ்சா வைத்திருந்த மலைக்கோவிலூரை அடுத்த சீத்தப்பட்டி காலனியைச் சேர்ந்த கார் மெக்கானிக் திவாகர்(25) மற்றும் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், ரூ.24,000 மதிப்புள்ள 2.150 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT