Published : 04 Nov 2021 03:14 AM
Last Updated : 04 Nov 2021 03:14 AM
நல்லவன்பாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 13 இடங்களில் ரூ.16.47 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதில், நல்லவன்பாளையம் அரசினர் மேல்நிலை பள்ளியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை (திருவண்ணாமலை), விஷ்ணு பிரசாத் (ஆரணி) உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘எப்போ தெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வித் துறையில் திருவண்ணாமலை மாவட்டம் முன்னிலையில் வர வேண்டும். இந்தாண்டு தேர்ச்சி விகிதாச்சாரம் கூடுதலாக இருக்க வேண்டும்’’ என்றார்.
இதனை தொடர்ந்து, திருவண் ணாமலை ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைக் கிடங்கை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, தண்டராம்பட்டு வட்டம் வடத்தனூர் கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் பங்கேற்று மனுக்களை பெற்ற அமைச்சர் எ.வ.வேலு, விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கினார். பட்டா மாறுதல் முகாமில் பெறப்பட்ட 175 மனுக்களில் 19 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் மு.பெ.கிரி, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக் குமாரசாமி, கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT