Published : 30 Oct 2021 03:14 AM
Last Updated : 30 Oct 2021 03:14 AM

முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதியின்படி - மதுரை கப்பலூர், ரிங் ரோடு டோல்கேட்டுகள் அகற்றப்படுவது எப்போது? :

மதுரை

மதுரை கப்பலூர் டோல் கேட் மற்றும் ‘ரிங்’ ரோடு டோல்கேட்டுகளால் பாதிக்கப்படும் வாகன ஓட்டுநர்கள், உள்ளூர் மக்கள் அடிக்கடி போராட்டம், மறியலில் ஈடுபட்டுவரும் நிலையில், சட்டப்பேரவை தேர்த லின் போது, ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறிய முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருமங்கலம் அருகே கப்பலூரில் மதுரை-திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள “டோல்கேட்” மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் தீராப் பிரச்சினையாக தொடர்ந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிமுறைப்படி இந்த டோல்கேட், திருமங்கலத்தை தாண்டி மேலக்கோட்டையில் அமைந்திருக்க வேண்டும். ஆனால், விதிமுறைக்கு புறம்பாக திருமங்கலத்துக்கு முன்பே கப்பலூரில் இந்த டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள திருமங்கலம், பேரையூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

அதேபோல், நான்கு வழிச் சாலையை பயன்படுத்தாமல் திருமங்கலம் வழியாக கொல்லம் நெடுஞ்சாலையில் டி.கல்லுப்பட்டி, வில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, குற்றாலம் செல்கிறவர்களும் கப்பலூர் டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் கட்டாய நிலை உள்ளது. இதனால் டோல்கேட் அமைக்கப்பட்ட தொடக்க காலம் முதலே உள்ளூர் மக்களுக்கும், டோல்கேட் ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

பாஸ்ட் டேக் வருவதற்கு முன் தற்காலிகமாக உள்ளூர் மக்களிடம் கட்டணம் கேட்கக்கூடாது என பலமுறை அதிகாரிகள் வலியுறுத்தி யதன் பேரில் மதுரை பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் வசூல் செய்யாமல் இருந் தனர். ஆனால் பாஸ்ட் டேக்-க்குப் பிறகு உள்ளூர் வாகனங்களுக்கும் கட்டணம் வசூல் செய்கின்றனர். நான்கு வழிச்சாலையில் 60 கி.மீ. இடைவெளியில்தான் டோல்கேட் அமைக்க வேண்டும். ஆனால், விதிமீறி திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் டோல்கேட் அமைத் துள்ளனர்.

மதுரை ஒத்தக்கடையில் சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வந்தார். அப்போது அவரிடம் பல்வேறு தரப்பினர் கப்பலூர் மற்றும் மாநகராட்சி ‘ரிங்’ ரோடு டோல்கேட்டுகளை அப்புறப்படுத்த முறையிட்டனர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் கப்பலூர் டோல்கேட் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்,’’ என்றார்.

இதேபோல், சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சென்னை ஓஎம்ஆரில் உள்ள 4 டோல்கேட்டுகளில் கட்டண வசூல் நிறுத்தப்படும் என்று ஸ்டாலின் உறுதியளித்து இருந்தார். அவர் கூறியபடி ராஜீவ் காந்தி சாலையில் (பழைய மகாபலிபுரம் ரோடு) உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், கலைஞர் சாலை மற்றும் மேடவாக்கம் சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் கட்ட ணம் வசூலிக்கப்படுவது நிறுத்தப் பட்டது. ஆனால், மதுரையில் மட்டும் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த டோல்கேட் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பசும்பொன் தேவர் குருபூஜை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக மதுரை வந்துள்ள முதல்வர் ஸ்டாலின் மதுரை கப்பலூர் மற்றும் ரிங்ரோடு டோல்கேட்டுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x