Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

அனைத்து செயல்களிலும் நேர்மையான சட்ட விதிகளை பின்பற்றுவேன் - ‘லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டேன்' : கடலூரில் ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதியேற்பு

நெய்வேலி மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை துணை தலைவர் அலுவலகத்தில் வீரர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

கடலூர்

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (26.10.2021 முதல் 01.11.2021 வரை) கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில் ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தலைமையில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

‘நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன் னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங் கிணைந்து செயல்பட வேண்டும் என நம்புகிறேன். நாட்டின் ஒவ் வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன். எனவே நான் அனைத்து செயல் களிலும் நேர்மமையாகவும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன்.

லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன். அனைத்து செயல்களிலும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன். பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன். தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத் துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன். ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகாரஅமைப்பிற்குத் தெரியப்படுத்து வேன் என்றும் உறுதி கூறுகிறேன்” என்று ஆட்சியர் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண் டனர்.

இதில் பங்கேற்ற அனைத்து அலுவலர்களும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், கரோனா வழிகாட்டு

நெறிமுறைகளை பின்பற்றி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) டெய்சிகுமார் மற்றும் அனைத்துத்துறை அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

இது போல நெய்வேலியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை துணை தலைவர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு நேற்று துணைத் தலைவர் திக்விஜய் குமார் சிங், சீனியர் கமாண்டன்ட் ஷேக் அப்துல்லா முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான வீரர்கள் கலந்துகொண் டனர்.

இது போல சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் சாஸ்த்ரி அரங்கத்தில் ஊழல்ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் துணை வேந்தரின் குழு உறுப்பினர்கள் டாக்டர் னிவாசன், டாக்டர்பாலாஜி, பதிவாளர் டாக்டர் ஞானதேவன் மற்றும் தேர்வுக்கட்டுப் பாட்டு அதிகாரி செல்வநாராயணன், தொலை தூரக்கல்வி இயக்கக இயக்குநர் டாக்டர் சிங்காரவேலன் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்கள் இந்த உறுதி மொழியேற்பில் பங் கேற்றனர்.

இதே போல், நெய்வேலி மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை துணை தலைவர் அலுவலகத்தில் வீரர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x