Published : 27 Oct 2021 03:09 AM
Last Updated : 27 Oct 2021 03:09 AM

வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுக்க - உள் அனுமதிச் சீட்டு நடைமுறையை கொண்டு வர வேண்டும் : தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள்

கடலூர்

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுக்க, தமிழ்நாடு அரசுஉள் அனுமதி சீட்டு நடை முறையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்துஅக்கட்சியின் தலைவர் வேல்முரு கன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய விடுதலைக்கு பின்னர்,மொழி – இன மாநிலங்களாக இந்தி யாவை பிரித்து கூட்டாட்சி நடத்தும் திட்டம் முன்வைக்கப்பட்டது. அதே போல் விடுதலைக்கு பின் மொழி – இன மாநிலங்களை அமைத்தார்கள். அதற்குச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில்திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக் கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கி றார்கள்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலை யாகக் வந்திறங்குகின்றனர். உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். இதன் காரணமாக, மண்ணின் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது.தொழில் - வணிகம் ஆகியவற்றிலும் வெளிமாநிலத்தவரே ஆதிக்கம் செலுத் தும் ஆபத்தான நிலை உள்ளது. இப்போக்கு, தமிழர்களின் வேலை, தொழில், வணிகம், பண்பாடு உள்ளிட்ட வாழ்வுரிமையைப் பறிக்கிறது. மொழியினத் தாயகமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைக்கிறது.

அசாம் மாநிலத்தின் பாரக் பள்ளத்தாக்கு பகுதியில் மிகை எண்ணிக்கையில் குடியேறிய வங்காளிகள், அப்பகுதியை தங்களுக்கே உரிய தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கின்றனர். அப்பகுதியின் அலுவல் மொழியாக தங்கள் தாய்மொழியான வங்க மொழியை ஆக்கி விட்டார்கள். அப்பகுதியில் அறிவிப்பு பலகைகளில் இருந்த அசாம் மொழி சொற்களை தார் பூசி வங்காளிகள் அழித்துள்ளனர்.

அசாமிடம் இருந்து தமிழ்நாடு பாடம் கற்கவில்லை என்றால், தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே சிறுபான்மையாய் ஆகிவிடுவார் கள். தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தவர்களின் குற்றச்செயல்கள் அதி கரித்து வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் தமிழர்கள் மீது வடமாநிலத்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.

எனவே, தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் வெளிமாநிலத்தவர்களின் குடியேற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையில், உள் அனுமதி சீட்டு நடைமுறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகவாழ்வுரிமைக் கட்சி வேண்டு கோள் விடுக்கிறது என்று தெரி வித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x