Published : 23 Oct 2021 03:08 AM
Last Updated : 23 Oct 2021 03:08 AM

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் போட்டியின்றி தேர்வு :

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெயசந்திரன் ஆட்சியர் மோகன் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக ஜெயச்சந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப் பட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 28மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்தன. இதில் 26 இடங்களில் திமுகவும், ஒரு இடத்தில் கூட்டணி கட்சி யான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றிபெற்றது. வெற்றிபெற் றவர்கள் கடந்த 22-ம் தேதி பதவிஏற்றுக்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர், துணைத் தலைவருக் கான மறைமுகத்தேர்தல் நேற்று ஆட்சியர் மோகன் முன்னிலையில் நடந்தது.

இத்தேர்தலில் 18-வது வார்டுஉறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜெயச்சந்திரன் தலைவர் பதவிக்கு போட்டியின்றி வெற்றிபெற்றார். தொடர்ந்து அவர் ஆட்சியர் முன்னிலையில் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். அதேபோல், துணைத்தலைவராக 10-வது வார்டு உறுப்பினர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஷீலாதேவி சேரன் தேர்வு செய் யப்பட்டார்.

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவராக வெற்றிபெற்ற ஜெயச்சந்திரன் கூறுகையில், "தமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் திமுக தலைவரும், முதல்வரு மான மு.க ஸ்டாலின் சட்டமன்றத்தேர்தலின்போது அளித்தவாக் குறுதிகளை நிறைவேற்றி மக்களி டம் அமோக வரவேற்றை பெற் றுள்ளதால் உள்ளாட்சியில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்தும்வகையில் முதல்வர், அமைச்சர்களின் அறிவுரையின்படி நாங்கள் பணியாற்றுவோம். குறிப்பாக, விழுப்புரம் மாவட் டத்தில் ஊரகப்பகுதிகளில் அடிப் படைவசதிகள் கிடைக்க மாவட்ட ஊராட்சிக்குழுவை சிறப்பாக செயல்படுத்துவேன்.

இந்த வாய்ப்பு வழங்கிய முதல் வர், உயர்கல்வித்துறை அமைச்சர், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுக்கும் நன்றியை தெரிவித் துக்கொள்கிறேன்" என்றார்.

துணைத்தலைவராக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஷீலாதேவி சேரன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x