Published : 20 Oct 2021 03:10 AM
Last Updated : 20 Oct 2021 03:10 AM

கம்மம்பள்ளி ஊராட்சியில் - அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை : கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் உறுதி

கம்மம்பள்ளி ஊராட்சி பாரூர் கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கிருஷ்ணகிரி

கம்மம்பள்ளி ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி அடுத்த கம்மம்பள்ளி மற்றும் காட்டுநாயக்கன் பள்ளி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில், கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, கம்மம்பள்ளி கிராம மக்கள், கிராமத்திற்கு சிமெண்ட் சாலை அமைத்து, சாக்கடைக் கால்வாயை தூர்வார வேண்டும். ரேஷன் கடை முதல் குடியிருப்பு வரை சாலை மற்றும் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்றனர். அதேபோல் பாரூர் கிராம மக்கள், சமுதாயக் கூடம், ஆழ்துளைக் கிணறு, சேசன் ஏரி தூர்வாருதல், நெல் களம் அமைத்தல், தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலை, எருது விடும் திருவிழா, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கு பதில் அளித்த எம்.எல்.ஏ., ஆழ்துளைக் கிணறு அமைத்து குடிநீர் தொட்டி வைத்து, சிமெண்ட் சாலை அமைக்க சட்டபேரவை தொகுதி நிதியில் இருந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் ஆண்டுக்கு 2 திட்டங்கள் வீதம் 5 ஆண்டுகளில் 10 திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், கன்னியப்பன், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் வெங்கட்ராமன், ஊராட்சித் தலைவர் சென்றாயப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x