Published : 16 Oct 2021 06:13 AM
Last Updated : 16 Oct 2021 06:13 AM
மகாராஷ்டிரா மாநிலம், சோலாப் பூர் கோட்டத்தில் இரட்டை ரயில் பாதைப் பணிகள் நடக்கின்றன.இதனால் கீழ்க்கண்ட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மதுரை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அக்டோபர் 20 முதல் 27 வரை மும்பையில் இருந்து புறப்படும் (வண்டி எண்: 01201) மும்பை லோக்மான்ய திலக் - மதுரை சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 22-ம் தேதி மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய (எண் 01202 ) மதுரை - மும்பை லோக்மான்ய திலக் சிறப்பு ரயில் ஆகியவை மட்கான், மங்களூர், ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
அக்டோபர் 18, 19, 20, 22, 25, 26, 27 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் (வண்டி எண்: 06340) நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 19, 20, 21, 23, 26, 27 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் (வண்டி எண்: 06339) மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூரு, ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். அக்டோபர் 21, 24 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் (வண்டி எண்: 06352 ) நாகர்கோவில் - மும்பை ஜிஎஸ்டி சிறப்பு ரயில் மற்றும் அக்டோபர் 18, 25 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் (வண்டி எண்; 06351) மும்பை சிஎஸ்டி - நாகர்கோவில் சிறப்பு ரயில் தாணே, பன்வெல், ரோஹா, மட்கன், மங்களூரு, ஷோரனூர், பாலக்காடு, ஈரோடு, திருச்சி வழியாக இயக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT