Published : 16 Oct 2021 06:15 AM
Last Updated : 16 Oct 2021 06:15 AM
வேலூர், திருவண்ணாமலையில் லிம்ரா நிறுவனம் சார்பில் நாளை இலவச கருத்தரங்கம் நடைபெற வுள்ளது.
நாடு முழுவதும் 2021-ல், 1,12,889 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். தமிழக அரசின் 26 மருத்துவக் கல்லூரிகளிலும். எம்.பி.பி.எஸ் சீட் எண்ணிக்கை 3,650. இதில் பிற ஒதுக்கீடுகளுக்கு போக 2,714 உள்ளது. இந்த ஆண்டு நீட் கட்-ஆப் மதிப்பெண் 40 முதல் 70 வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மருத்துவம் படிக்க இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், நீட்தேர்வு எழுதாமல் இருந்தாலும், இந்த ஆண்டு இந்தியா மற்றும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க என்ன மாதிரியான வாய்ப்புள்ளது?.
சீனா வரும் மே 2022 வரை வெளிநாட்டு மக்கள், குறிப்பாக மருத்துவ மாணவர்கள் வரு வதை தடை செய்துள்ளது. ரஷ்யா, உக்ரைன், ஜியார்ஜியா, கசக்கஸ் தான் ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களால் பல ஆண்டுகள் முயற்சி செய்தும் எப்.எம்.ஜி என்னும் தகுதி நிர்ணய தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, இதற்குக் காரணம் இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப் படிப்பில் உள்ள 19 பாடங்களில், முக்கிய பாடங்களான பேதாலஜி, பி.எஸ்.எம்., பிசியாலஜி மற்றும் பார்மகாலஜி ஆகிய பாடங்களை நடத்துவதே இல்லை. இதனால், அங்கு படிப்பு முடித்து வரும் மாணவர்கள், எப்.எம்.ஜி தேர்வில் 12% மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.
மேலும், இங்குள்ள மருத்துவ மனைகளில் நோயாளிகளை நேரில் பார்த்து மருத்துவம் அளிக்க மருத்துவ மாணவர் களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கூறிய நாடு களில் அந்தந்த நாட்டின் மொழியை கற்று தேர்ச்சிப்பெறவேண்டும். இதனை நன்கு உணர்ந்த பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் மருத்துவம் பயில பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கும் தவோ மற்றும் ப்ரோகேன்ஷயர் மருத்துவப் பல்கலைக் கழகமும் இவர்களின் தேர்வாக உள்ளன.
சென்னையில் கடந்த 19 ஆண்டு களாக இயங்கிவரும் லிம்ரா நிறுவனம் இந்த இரண்டு மருத்துவப் பல்கலைக் கழகங்களின் அதிகாரப்பூர்வ தென்னிந்தியப் பிரதிநிதி நிறுவனங்களில் ஒன்றாக இயங்கி, இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட மருத்துவர்களை உருவாக்கியுள்ளது. இந்த பல்கலைக் கழகங்களில் எம்.பி.பி.எஸ்.க்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. எப்.எம்.ஜி தேர்வுக்குக் கட்டணமின்றி பயிற்சி வழங்குகிறது. மற்ற மாணவர்கள் இதற்கு ரூ.75,000 செலுத்தி வருகின்றனர்.
லிம்ரா நிறுவனத்தின் FMGE பயிற்சிப் பிரிவான லைம் நிறு வனத்துடன் இணைந்து தொடர் உழைப்பால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற எப்.எம்.ஜி. தேர்வில் 150 மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இலவச கருத் தரங்கம் நடைபெறும் இடங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை), காலை 10.30 மணிக்கும் Hotel Athena, No.516, Chengam Road, Thiruvannamalai, அதனை தொடர்ந்து மாலை 5 மணியளவில் Regency GRT Hotels Regency Sameera, No.145, Green Circle, New By-pass Road, Vellore - 632004 நடைபெறவுள்ளது. மாணவர்கள் கருத்தரங்கில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து மேலும் தகவல்கள் வேண்டுவோர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் : 99529 22333 / 9445783333.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT