Published : 08 Oct 2021 03:12 AM
Last Updated : 08 Oct 2021 03:12 AM
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 75.5 சதவீத வாக்குகள் பதிவாகின.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த தேர்தலில் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 82 சதவீத வாக்கும், உத்திரமேரூர் ஒன்றியத்தில் 85 சதவீத வாக்கும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 86 சதவீத வாக்குகளும் பதிவாகின. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சராசரியாக 84.3 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குப் பெட்டிகள் பத்திரமாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு வரப்பட்டு பிரத்யேக அறையில் சீல் வைக்கப்பட்டன. காஞ்சிபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளின் வாக்குப் பெட்டிகள் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியிலும், உத்திமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குப் பெட்டிகள் திருப்புலிவனம் அரசு கலைக் கல்லூரியிலும், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குப் பெட்டிகள் ஏனாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியிலும் கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டன.
திருப்புலிவனம் எம்ஜிஆர் அரசு கல்லூரியில் சீல் வைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு செய்தார்.
இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையர் மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், லத்தூர் ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. புனித தோமையர் மலையில் 52.16 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. திருக்கழுக்குன்றத்தில் 77.08 சதவீத வாக்குகளும், திருப்போரூர் ஒன்றியத்தில் 76.92 சதவீத வாக்குகளும், லத்தூர் ஒன்றியத்தில் 66.71 சதவீதவாக்குகளும் பதிவாகின. செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த வாக்கு சதவீதம் 66.71 ஆகும்.
அக்.12-ல் வாக்கு எண்ணிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்திலும் வாக்குக் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வந்துசீல் வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்டவாக்குப் பதிவு நாளை (அக்.9-ம்தேதி) நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.12-ம் தேதி நடைபெற உள்ளது.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT