Published : 06 Oct 2021 03:13 AM
Last Updated : 06 Oct 2021 03:13 AM

மானாமதுரை அருகே அரசு பள்ளி - தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் :

மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி முன்பாக போராட்டம் செய்த கிராம மக்கள்.

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அருகே அரசு பள்ளியில் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதாகக் கூறி தலைமை ஆசிரியரைக் கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 540 மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரி யராக இருப்பவர் சேவியர் ஆரோக்கியதாஸ். இவர் மாணவர் களிடம் பள்ளி வளர்ச்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலிப்பதாகவும், மாணவர்களிடம், ஆசிரியர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதாகவும் கூறி, பள்ளி முன்பாக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவர்கள் தலைமைஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டுமென வலியுறுத் தினர். இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: மாணவர்களிடம் ஆசிரியர்கள் யாரும் தகாத வார்த்தைகளால் பேசவில்லை. பெற்றோரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே, பள்ளி வளர்ச்சிக்காக பணம் வசூலிக்கப்பட்டது. அதற்கும் ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. யாரிடமும் வற்புறுத்தி பணம் பெறவில்லை. எங்கள் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் 330 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஒரு சில தனியார் பள்ளிகளில் இருந்து பல மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து விட்டனர். இதனால் தனியார் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலால் சிலர் போராட்டம் நடத்துகின்றனர்.

மாணவர்களின் பெற்றோர் இப்போராட்டத்தில் ஈடுபட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x