சிவகங்கையில் இரு வாரங்களில் அடுத்தடுத்து 6 கொலைகள் : அச்சத்தில் மாவட்ட மக்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இரு வாரங்களில் அடுத்தடுத்து 6 கொலைகள் நடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணாநகரைச் சேர்ந்த சரத் குமாரை (30), செப்.3-ம் தேதி மதுபோதை தகராறில் நண்பர்களே கொலை செய்தனர். செப்.4-ம் தேதி தேவகோட்டை அருகே பிடாரனேந்தலில் டீக்கடைக்காரர் மாயழகு (70), அவரது டீக்கடை யிலேயே காயங்களுடன் இறந்து கிடந்தார்.
செப்.13-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எஸ்.காவனூரைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜை (32) மது போதை தகராறில் காளையார்கோவிலில் அவரது உறவினரே கொலை செய்தார். செப்.15-ம் தேதி திருப்புவனம் அருகே வேம் பத்தூர் லட்சுமிபுரத்தைச் சேர்ந்த விவசாயி அழகுமலையை (45), முன்விரோதத்தில் அவரது உறவி னர்களே கொலை செய்தனர். செப்.16-ம் தேதி சிவகங்கை அருகே கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரும், பாஜக பிரமுகருமான முத்துப்பாண்டியை (45) முன்விரோதத்தில் ஒரு கும் பல் வெட்டிக் கொலை செய்தது.
நேற்று சிங்கம்புணரியில் உள்ள மயானத்தில் மதுரை அவனி யாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (62) காயத்துடன் பாதி எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மாவட்டத்தில் நடக்கும் தொடர் கொலைகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெரும் பாலான கொலைகள் மதுபோதை தகராறிலேயே நடப்பதால், அதனைத் தடுக்க போலீஸார் நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
