Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

பீமாகோரேகான் வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் :

கும்பகோணம்/ தஞ்சாவூர்

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கும்பகோணம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, பாபாநாசம் எம்எல்ஏவும், மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, நகரச் செயலாளர் மதியழகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பீமா கோரேகான் எழுச்சியை சட்டவிரோதம் எனக் கூறி, உபாசட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பத்மாவதி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் நிம்மதி மற்றும் அமைப்புக் குழு உறுப்பினர்கள் ராயப்பன், சுந்தர்ராஜன், பரமசிவம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.பக்கிரிசாமி தலைமை வகித்தார். அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலச் செயலாளர் க.பாரதி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம், விவசாய தொழிலாளர் சங்க மாநிலப் பொருளாளர் சி.சந்திரகுமார், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அறந்தாங்கியில்...

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஒடுக்கப்பட் டோர் வாழ்வுரிமை இயக்கத் தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.லோகநாதன் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x