Published : 21 Aug 2021 07:02 AM
Last Updated : 21 Aug 2021 07:02 AM
ரங்கம் வடக்கு சித்திரை வீதியில் உள்ள இந்து சமய மன்றம் சார்பில் 43-ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, உதகசாந்தி நிகழ்ச்சியும், 9 சிறுவர்களுக்கு பூணூல் அணிவிக்கும் ப்ரம்மோபதேசமும் நடைபெற்றது. அனைவருக்கும் சந்தியா வந்தனம் புத்தகம் வழங்கப்பட்டது. நிறைவாக பாலிகை கரைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்து சமய மன்றம் சார்பில் இதுவரை 1,390 சிறுவர்களுக்கு உபநயனமும், 48 தம்பதிகளுக்கு திருமணமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை ரங்கம் இந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT