Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத் திருவிழாவின் 3-ம் நாளான நேற்று மாணிக்கம் விற்ற லீலை நடந்தது. அப்போது பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் எழுந்தருளினர்.
4-ம் நாளான இன்று (ஆக.14) தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை நடைபெறும். 5-ம் நாள் (ஆக.15) உலவவாக்கோட்டை அருளியது, 6-ம் நாள் (ஆக. 16) பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவி ளையாடல் நடைபெறும். 7-ம் நாள் (ஆக.17) வளையல் விற்ற லீலை, இரவு பட்டாபிஷேகம் நடைபெறும். 8-ம் நாள் (ஆக.18) நரியை பரியாக்கிய லீலை, குதிரை கயிறு மாறிய லீலை, 9-ம் நாள் (ஆக.19) பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 10-ம் நாள் (ஆக.20) விறகு விற்ற லீலை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT