Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM
அந்த மொபைல் மூலம் முகநூலில் சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை கார்த்திகேயன் ஜூலை 29-ம் தேதி திருப்பூர் அழைத்துச் சென்று கோயிலில் திருமணம் செய்துள்ளார். பிறகு அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்தனர். இதற்கிடையில், தனது மகள் மாயமானது குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரில் காரைக்குடி வடக்கு போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில் நேற்று திருப்பூரில் இருந்த சிறுமியையும், கார்த்திகேயனையும் போலீஸார் காரைக்குடிக்கு அழைத்து வந்தனர். காரைக்குடி காப்பகத்தில் சிறுமியை ஒப்படைத்துவிட்டு, கார்த்திகேயனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT