Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM
சுதந்திர தின விழா நாளை(ஆக.15) கொண்டாடப்படவுள்ளதை யொட்டி, காரைக்கால் கடற்கரைச் சாலையில் சுதந்திர தின விழா நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இதையொட்டி, காவல் துறை யினர், ஊர்க்காவல் படையினர், இந்திய ரிசர்வ் பட்டாலியன், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்ற அணி வகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சி ஒத்திகை கடற்கரைச் சாலையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை ஆட்சியர் அர்ஜூன் சர்மா, மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர்.
நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை யாற்றுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT