Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டை 300 பேருக்கு வழங்கல் :

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளி ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டையை வழங்குகிறார் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா.

காரைக்கால்

புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி, காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி, குரும்பகரம் ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்றது.

இதில், புதுச்சேரி போக்கு வரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சிறப்பு அழைப் பாளராகக் கலந்துகொண்டு, நெடுங்காடு சட்டப்பேரவைத் தொகு திக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 பயனாளிகளுக்கு மாதந் தோறும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கி பேசியது:

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக எந்த நலத்திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பொறுப்பேற்றுள்ள அரசின் மூலம் மக்களுக்கான அனைத்து நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்படும்.

புதுச்சேரி முதல்வர் உதவித் தொகையை உயர்த்தியதன் மூலம் முதியோர், பெண்கள் மிகவும் பயனடைவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நலத்துறை உதவி இயக்குநர் சத்யா மற்றும் அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x