Published : 05 Aug 2021 03:19 AM
Last Updated : 05 Aug 2021 03:19 AM

தலைவன் என்ற சொல்லுக்கே தனி இலக்கணம் வகுத்த முதல்வர் : டி.மதியழகன் எம்.எல்.ஏ. புகழாரம்

நேற்று மாலை ஓசூருக்கு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் வரவேற்றார். அருகில் ஓசூர் எம்.எல்.ஏ ஒய்.பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன் ஆகியோர் உள்ளனர்.

கிருஷ்ணகிரி

தலைவன் என்ற சொல்லுக்கே தனி இலக்கணம் வகுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் புகழாரம் சூட்டி உள்ளார்.

இதுதொடர்பாக திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவரும், பர்கூர் எம்எல்ஏவுமான டி.மதியழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நம்பிக்கை, நேர்மை, கடின உழைப்பு என்ற சொல்லுக்கு உரியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஒரு நல்ல தலைவன் தான்சார்ந்த மக்கள் மீது மிகுந்த நம்பிக்கையும் எப்போதும் நேர்மை தவறாதவராகவும் மக்களுக்காக உழைப்பவராகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய தலைவன் கிடைத்து விட்டால் அம்மக்கள் வாழ்வாங்கு வாழ்வர் என வள்ளுவன் கூறியது அப்படியே கனகச்சிதமாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு பொருந்துகிறது என்றால் சிறிதும் மிகையாகாது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை சீராக்கி செம்மை படித்திட உலக பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழுவை உருவாக்கியதைக் கண்டு, ஜெர்மனி உள்ளிட்ட மேலைநாடுகளே, முதல்வரின் நிர்வாக திறமையை வியந்து பாராட்டுகின்றனர்.

மருத்துவ படிப்புக்கான இட ஒதுக்கீட்டை 30 வருடங்களுக்கும் மேலாக போராடி ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதத்தை பெற்றுத்தந்த முதல்வரை குமரி முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

ஆட்சிக்கு வந்து 75 நாட்களில் இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் மேல் சாதனைகள் புரிந்து, சிறந்த முதல்வராக திகழ்கிறார் மு.க.ஸ்டாலின். ஏழை, எளிய மக்களின் உயிர் காக்க, இந்தியா விலேயே முதன்முறை யாக மக்களைத் தேடி மருத்துவம் என்கிற உன்னதமான திட்டத்தை தொடங்கிவைக்க, மாங்கனி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வரை வாழ்த்தி வணங்கி வருக வருக என வரவேற்கிறேன். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x