Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

காவல்துறையில் தேர்தல் பிரிவு தொடக்கம்

கோவை

தேர்தல் விதிமீறல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, கோவை மாநகர மற்றும் மாவட்டக் காவல் துறையில் தேர்தல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாநகர காவல் துறையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையர் செல்வம் தலைமையில் ஓர் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 16 பேர் தேர்தல் பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டக் காவல் துறையில், நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் இப்பிரிவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் துறையினர் கூறும்போது,‘‘ தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு, கடந்த தேர்தல்களில் பதிவான வழக்குகளின் தற்போதைய நிலவரம் குறித்து ஆய்வு செய்தல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்ள உள்ளனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x