Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM

காவல் நிலையத்தில் துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள படைக்கல உரிமையாளர்கள் தங்கள் துப்பாக்கிகளை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தல் 2021-க்கான அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதையொட்டி, தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்வரை படைக்கலன்கள் வைத்திருக்கவும், எடுத்துச் செல்லவும் தடையாணை அமலுக்கு வந்துள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரர்களும் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைத்து அதற்கான ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து ஒரு வாரம் முடிவுற்ற பின்னர் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x