Published : 28 Feb 2021 03:18 AM
Last Updated : 28 Feb 2021 03:18 AM
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (1-ம் தேதி) அனைத்துக்கட்சி பிரதிநிதி களுடனான ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில்தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிகளை முழுமையாக பின்பற்றுவது தொடர்பாகஅனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நாளை (1-ம் தேதி)காலை 11 மணியளவில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடக்க உள்ளது. ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 பிரதிநிதிகளுக்கு மிகாமல் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT