Published : 10 Feb 2021 03:16 AM
Last Updated : 10 Feb 2021 03:16 AM

பத்தலப்பள்ளி அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கீடு பேரணாம்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்

வேலூர் அண்ணா சாலையில் நேற்றிரவு நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் முதல்வர் பழனிசாமி.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

பேரணாம்பட்டு பத்தலப்பள்ளி அணை கட்ட ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அணை கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, நேற்று அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட கந்தனேரி பகுதியில் மகளிர் குழுவினர் மத்தியில் பேசும்போது, ‘‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் பெரிய அடியை மு.க.ஸ்டாலின் சந்திப்பார். திமுக தோல்வியை தழுவும். ஸ்டாலினே ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார் சிறுவதிலேயே அண்ணாவுக்கு வாங்கிச்சென்ற பக்கோடாவை சிறிது திருடினேன் என கூறியுள்ளார். ஆக, 'தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை' என்பது போல சிறு வயது முதலே அவர் அப்படித்தான்.

கஷ்டப்பட்டு கட்சியில் உழைத்து மேலே வருவது பற்றி ஸ்டாலினுக்கு தெரியாது. திமுக என்றால் அராஜக கட்சி தான். அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. அணைக்கட்டு தொகுதியில் முத்துக்குமரன் மலையடிவாரத் தில் இருந்து பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடி ஒதுக்கியுள்ளோம். ஆனால், அந்த தொகுதி திமுக எம்எல்ஏ தாங்கள் தான் சாலையை கொண்டு வந்ததாக கூறுகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் நாங்கள். ஆனால், யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது.

பேரணாம்பட்டு பகுதியில் பத்தலப்பல்லியில் அணை கட்ட ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளோம். விரைவில், அணை கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும். என்றைக் கும் விவசாயிகளுக்கு காவலனாக இருந்து அனைத்தையும் செய்வேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். விவசாயிகள் வாயில் விஷம் ஊற்றும் விஷக்கிருமி பழனிசாமி என ஸ்டாலின் பேசுகிறார். விவசாயியை தரக்குறைவாக பேசினால், அந்த எதிர்கட்சி வரிசை கூட கிடைக்காது’’ என்றார்.

குடியாத்தம்

குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘கரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக காணொலி மூலம் பிரதமர் நடத்திய ஆலோசனையில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். முழுக்க முழுக்க ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த ஒரே மாநிலம் தமிழகம்தான்.

திமுக ஆட்சியில் மின் வெட்டு மாநிலம், இப்போது மின் மிகை மாநிலமாக உள்ளது. இதனால், புதிய தொழில்கள் தமிழ்நாடு நோக்கி வந்துக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் ஊர் ஊராகச் சென்று மனுக்களை வாங்கினர். அந்த மனுக்கள் என்னவானது. பொய் பேசுவதில் வல்லமை படைத்தவர்கள் திமுகவி னர். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவினர் கொடுத்த வாக்குறு தியை நிறைவேற்றினார்களா’’ என்றார்.

7 பேர் விடுதலை?

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் பழனிசாமி, காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் இருந்தபடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, வேலூர் மாநகர மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் வரவற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, ‘‘திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது நளினியை தவிர்த்து மற்றவர்களுக்கு தண்ட னையை நிறைவேற்றலாம் எனஅமைச்சரவை கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில், துரைமுருகனும் கையெழுத்திட்டுள்ளார். இன்று ஆளுநரிடம் சென்று 7 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்று மனு கொடுக்கின்றனர். இவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை 2000-ம் ஆண்டில் நிறைவேற்றி இருந்தால் அவர்கள் மண்ணோடு மண்ணாகி இருப்பார்கள். எவ்வளவு பச்சைப் பொய் பாருங்கள். எடப்பாடி பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை என்று கூறுகிறார்கள்.

கடந்த 2000-ம் ஆண்டில் இவர்களை விடுதலை செய்ய தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தால் அவர்கள் விடுதலை ஆகி 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றலாம் என்று ஏகமனதாக நிறைவேற்றிய திமுகவினர், 7 பேர் விடுதலை குறித்து அதிமுக அமைச்சரவை தீர்மானத்துக்கு பிறகு இப்போது விடுதலை செய்யும்படி சொல்கிறார்கள்.

நீதிமன்ற தண்டனையை நிறை வேற்ற கையழுத்து போட்டுவிட்டு இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அழுத்தம் கொடுக்கவில்லை என்கின்றனர். 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மனசாட்சியோடு தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவினர் வேண்டும் என்றே திட்டமிட்டு பச்சை பொய் பேசுகின்றனர். 7 பேருக்கும் தண்டனையை ரத்து செய்ய தீர்மானத்தை நிறைவேற்றியது அதிமுக’’ என்றார்.

அரியர் தேர்வு ரத்து?

வேலூரில் முதல்வர் பழனிசாமி பேசும் போது, கூட்டத்தில் இருந்த சிலர் மாணவர்களின் ‘அரியர் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்றும் வரும் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிலர் எழுப்பி னர். அதற்கு முதல்வர் உங்கள் கோரிக்கை விரைவில் நிறைவேற் றப்படும் என்றார். தொடர்ந்து, பேசும்போது சிலர் கல்விக்கடன் ரத்து செய்ய வேண்டும் என்றனர். அதற்கு தேர்தல் அறிக்கையில் வரும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x