Published : 28 Jan 2021 07:17 AM
Last Updated : 28 Jan 2021 07:17 AM
மக்கும் குப்பையை உரமாக்கி தோட்டம் அமைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு, பல்லடம் நகராட்சி சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
தூய்மை இந்தியாவின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியில் வீடுகளில் சேகரமாகும் மக்கும் குப்பையை, சுகாதாரத் துறையின் வழிகாட்டுதலின்படி மக்கச் செய்து (Home Composting) வீட்டுத் தோட்டங்கள் மற்றும் மாடித் தோட்டங்களில் உள்ள பூச் செடிகள், காய்கறி செடிகளுக்கு உரமாக இடும்போது வழக்கத்தைவிட மூன்று மடங்கு செழிப்புடன் செடிகள் வளர்ந்து நல்லபலன் அளித்துள்ளன. பல்லடம் நகராட்சியில் உள்ள 243 வீடுகளில் மக்கச் செய்து, திடக்கழிவு மேலாண்மையை இல்லத்தரசிகள் செயல்படுத்தி வருகின்றனர். நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில், வார்டுக்கு 2 நபர்கள் வீதம் குடியரசு தின விழாவில் விருது வழங்கி இல்லத்தரசிகள் கவுரவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT