Published : 08 Jan 2021 06:54 AM
Last Updated : 08 Jan 2021 06:54 AM

கடலூர் மாவட்டத்தில் 41 குளங்களில் மீன் வளர்க்க அனுமதி

கடலூரில் ஊரக வளர்ச்சித்துறை குளங்களில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்திட திட்டசெயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.

கடலூர்

தேசிய வேளாண்மை அபிவிருத்திதிட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரக குளங்களில் 25 ஹெக்டேர் பரப்பளவில் 1 லட்சத்து 25 ஆயிரம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட மாவட்ட திட்ட செயலாக்க குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தில் 41 ஊரக வளர்ச்சித்துறை குளங்கள் இத்திட்டத்திற்காக தேர்வுசெய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஒருவார காலத்திற்குள் தொடங்கிட மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கண்ணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன், உடையார்குடி மீன்வள கூட்டுறவு சங்க தலைவர் பாலுபச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x