Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

கோவை மாநகரில் திருடுபோன ரூ.2.15 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு

கோவை

கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: 2020-ம்ஆண்டில் கோவை மாநகரில் 27 கொலை வழக்குகள், ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை தொடர்பாக தலா 3 வழக்குகள், 53 வழிப்பறி வழக்குகள், 56 வீடுபுகுந்து திருட்டு வழக்குகள், 232திருட்டு வழக்குகள் என மொத்தம் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 283 வழக்கு களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து திருடப்பட்ட ரூ.2.98 கோடி மதிப்பிலான பொருட்களில், ரூ.2.15 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளன. தொடர் கண்காணிப்பு காரணமாக 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 2020-ம் ஆண்டில் குற்ற வழக்குகள் குறைந்துள்ளன.

இதேபோல, 2 பாலியல் கொடுமை வழக்குகள், 46 போக்ஸோ வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் 106 வழக்குகள், மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 2,448 வழக்குகள், போதைப்பொருட்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 125 வழக்குகள், லாட்டரி விற்பனை தொடர்பாக 142 வழக்குகள்,சூதாட்டம் தொடர்பாக 248 வழக்குகள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்றது தொடர்பாக 1,871 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மீறியதாக 15.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.7.99 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

2019-ல் 1,085 சாலை விபத்துகளில் 126 பேர் உயிரிழந்தனர். ஆனால், 2020-ல் 726 சாலை விபத்துகளில் 65 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் தடையை மீறியதாக 11,856 பேர் கைது செய்யப்பட்டு, 6,764 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. பல்வேறு புகார்கள் தொடர்பாக 5,734 மனுதாரர்களின் வசிப்பிடத்துக்கே சென்று விசாரணை நடத்தி, உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x