Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

சி.இ.ஓ. உட்பட 2 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு கணக்கில் வராத ரூ.1 லட்சம் பறிமுதல்

கோவை

கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், கணக்கில் வராத ரூ.1 லட்சத்தை பறிமுதல் செய்ததுடன், முதன்மைக் கல்வி அலுவலர் உள்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவை டவுன்ஹால் அருகேயுள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக உஷா பணியாற்றி வருகிறார். பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்துலுக்கு இவர் லஞ்சம் பெறுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் சில ஊழியர்கள் இருந்தனர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தொகை பள்ளி நிர்வாகங்களிடமிருந்து லஞ்சமாகப் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று காலை 6 மணி வரை போலீஸார் சோதனை நடத்தினர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் கூறும்போது, "அலுவலகத்தில் கணக்கில் வராத தொகை இருந்தது தொடர்பாக, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா, அவரது நேர்முக உதவியாளர் பாலன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x