Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

பிஆர்டிசி தனியார்மயமாக்கம் இல்லை மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியீடு

புதுச்சேரி

புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படாது என அதன் மேலாண் இயக்குநர் தினேஷ் கண்ணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் (பிஆர்டிசி) சார்பில் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு விரைவுபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறித்த நேரம், வேகம் ஆகிய காரணங் களினால் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக பிஆர்டிசியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு 140பேருந்துகள் இயக்கப்படுகின்றன.ஓட்டு நர், நடத்துநர் உள்ளிட்ட 750க்கும் மேற்பட்டஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே விரைவு பேருந்துகளை தனியாா் மயமாக்க அரசு முயற்சி எடுத்ததுஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத் தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஆர்டிசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் காலவரையற்ற போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் 10 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் பங்கேற்பர் என்பதால் பிஆர்டிசி சேவை பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இதனிடையே புதுச்சேரி சாலை போக்கு வரத்து கழகத்தை தனியார் மயமாக்குதல் இல்லை என பிஆர்டிசி மேலாண் இயக்குநர் தினேஷ் கண்ணா தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘பிஆர்டிசி தனியார்மயமாக்க போவதாக வந்த செய்தியை அடுத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

இது தொடர்பாக அமைச்சர் ஷாஜ கான், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பிஆர்டிசி தனியார்மயமாக்கப்படாது என்றும், பொதுமக்கள் நலன் கருதி ஊழியர்கள் அனைவரும்பணிக்கு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். எனவே புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்கல்இல்லைஎன அறிவிக்கப்படுகிறது’’என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிஆர்டிசி நிர்வாகத்தின் செயல்பாடு குழப்பத்தையும், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளதாக ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப் படுகிறது.

இதுகுறித்து பிஆர்டிசி ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் தரப்பில் கூறும்போது, “தனியார்மயமாக்கப்படாது என்று அமைச் சர் உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனாலும் பிஆர்டிசி தனியார் மயமாக்கப்படுவதற்காக தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் இருந்துவிருப்ப கடிதங்களை நிர்வாகம் பெற்றுக்கொள்கிறது. எனவே பிஆர்டிசியில் என்னதான் நடக்கிறது என்பது தெரிய வில்லை. நிர்வாகத்தின் இந்த செயல்பாடு பொது மக்கள், ஊழியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது’’எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x