Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

மதுரை பிஎப் அலுவலகத்தில் ஜன.11-ல் குறைதீர் கூட்டம்

மதுரை

மதுரை வருங்கால வைப்பு நிதி (பிஎப்) அலுவலகத்தில் ஜன. 11-ம் தேதி காணொலிக் காட்சி வழியாக குறைதீர்க் கூட்டம் நடைபெறுகிறது.

மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எம்.விக்னேஷ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக ‘நிதி உங்கள் அருகில்’ எனும் குறை தீர்க்கும் கூட்டம் ஜன. 11-ம் தேதி நடைபெறுகிறது. இதில் மதுரை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலக ஆணையாளர் முன்னிலையில் வைப்பு நிதி சம்பந்தமான குறைகளை விசாரித்து தீர்வு காணப்படும்.

இந்த காணொலிக் காட்சி குறைதீர்க் கூட்டத்தில் வெபினார் செயலி மூலம் பங்கேற்கலாம். முன்னதாக இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து, குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்பதற்கான விருப்பத்தை வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்துக்கு ro.madurai@epfindia.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஜன.8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பின்னர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தொடர்பு எண் வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் குறைதீர்க் கூட்டத்தில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x