Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

குரூப் 1 போட்டித் தேர்வில் முறைகேடுகளை தடுக்க வீடியோ பதிவு தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குரூப் - 1 பதவிக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர் கார்த்திகா பேசினார்.

தருமபுரி

குரூப் 1 போட்டித் தேர்வில் முறை கேடுகள் நடைபெறுவதை தடுக்க, தருமபுரியில் தேர்வு மையங்களில் வீடியோ பதிவு செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குரூப்-1 பதவிக்கான போட்டித் தேர்வு முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

குரூப் -1 பிரிவில் அடங்கியுள்ள பதவிக்கான போட்டித் தேர்வு வரும் 3-ம் தேதி முற்பகல் நடைபெறுகிறது. அதன்படி தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 8983 தேர்வர்கள், 20 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் கைபேசி, கால்குலேட்டர் மற்றும் எலக்ட்ரானிக் கைக்கடிகாரம் உள்ளிட்ட உபகரணங்களை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, தன் பாது காப்பு நடவடிக்கையாக தனி கிருமி நாசினி திரவங்களைக் கொண்டு வரவேண்டும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க ஒவ்வொரு தேர்வு மையத்திலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் வழியாகச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் நின்று செல்லவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், டிஎஸ்பி அண்ணாதுரை, ஊராட்சிகள் உதவி இயக்குநர் சீனிவாசசேகர், வட்டாட்சியர்கள் சரவணன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x