Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM
காரைக்காலில் நிகழாண்டு குடியரசு தின விழாவை நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அர்ஜூன் சர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் கே.எல்.வீரவல்லபன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், கரோனா பரவல் தடுப்பு நெறிமுறைகளுக்குட்பட்டு விழாவை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது, “காரைக்காலில் புறவழிச்சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் எளிமையாக நடைபெற உள்ள விழாவில், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு மட்டுமே இடம்பெறும்” என ஆட்சியர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT