Published : 01 Jan 2021 07:54 AM
Last Updated : 01 Jan 2021 07:54 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.14.68 கோடியில் நயினார்குளம் கரையில் அழகிய நடைபாதை நகராட்சி நிர்வாக ஆணையர் ஆய்வு

திருநெல்வேலி டவுன் நயினார்குளம் கரையை மேம்படுத்துவது குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் க.பாஸ்கரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன். படம்: மு.லெட்சுமி அருண்.

திருநெல்வேலி

திருநெல்வேலி டவுன் நயினார் குளம் கரையை மேம்படுத்தி அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் ரூ.14.68 கோடியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணிகள், புதிய பேருந்து நிலையத்தில் அபிவிருத்தி பணிகள், மாநகராட்சி அலுவலகம் எதிரே வர்த்தக மையம், பழைய பேட்டையில் லாரிகள் முனையம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய மறுகட்டமைப்பு பணி, நேரு சிறுவர் பூங்கா புனரமைப்பு என்று பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை மேம்படுத்தி, கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதுதொடர்பாக, ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாக ஆணையர் க.பாஸ்கரன் கூறியதாவது:

நயினார்குளத்தின் கரையை முதற்கட்டமாக 1.5 கி.மீ. நீளத்துக்கு அழகுபடுத்துதல், பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்துதல், நடைபாதை அமைத்தல் போன்ற பணிகள் ரூ.14.68 கோடி மதிப்பில் நடைபெறவுள்ளது. நயினார் குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்புச்சுவர் அமைத்தும், நடுவில் அழகிய நடைபாதை அமைக்கப்படும். நடைபாதையில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு. மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன், ஸ்மார்ட் சிட்டி தலைமை நிர்வாக இயக்குநர் நாராயணன்நாயர், செயற்பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x